உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக் காதலி! கள்ளக் காதலன் செய்த விபரீத செயல்!

தவறான உறவை முடித்துக்கொள்ள வலியுறுத்திய கள்ளக் காதலியை சரமாரியாக குத்தி கொலை செய்த கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.


மயூரி மோர் என்ற திருமணமான 27 வயதுப் பெண்ணை அவரது குடியிருப்பிலேயே கொன்ற 29 வயதான கண்பத் அத்வதே என்ற நபரை கடந்த புதன் கிழமை போலீசார் கைதுசெய்தனர். கொலை நடந்தபோது மயூரியின் கணவரும், ஒரு பள்ளிய் மகேஷ் மோர் தனது சொந்த கிராமத்துக்கு சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மறுநாள் கிராமத்தில் இருந்து ம்கேஷ் வீடு திரும்பியபோது தனது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டுக்கு அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது கண்பத் அத்வதே வந்து சென்றது. தெரியவந்தது. 

மயூரி வேலை பார்க்கும் நகைக் கடையில் உடன் வேலை பார்க்கும் அத்வதேயே பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது இருவருக்கும் தவறான தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் மயூரியின் கணவர் மகேஷ் சொந்த ஊருக்குச் சென்றதைப் பயன்படுத்தி அவர்களது வீட்டுக்கு அத்வதே வந்த போது. மயூரி தங்களுக்கிடையேயான தவறான உறவை முடித்துக்கொள்ளலாம் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அத்வதே மயூரியுடன் தகராறில் ஈடுபட்டதும், தகராறு முற்றிய நிலையில் சமையலறைக் கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றதும் தெரிய வந்தது இதையடுத்து கண்பத் அத்வதேயை போலீசார் கைது செய்துள்ளனர்.