முறைதவறிய உறவு! கண்டுபிடித்த குடும்பத்தினர்! கள்ளக்காதலர்கள் எடுத்த விபரீத முடிவு!

விருத்தாசலம் அருகே தவறான உறவில் இருந்த ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது.


விருத்தாசலத்தில் உள்ள இனிப்பு கடையில் தொட்டிகுப்பத்தை சேர்ந்த திருமணமான ரமேஷ்  என்பவர் வேலை செய்து வந்தார்.  அதே கடையில் பெண்ணாடத்தை சேர்ந்த காயத்ரி என்ற பெண்  அண்மையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

காயத்ரிக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளன.  கடையில் வேலை பார்த்த போது ரமேசுக்கும் காயத்ரிக்கும்  நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது- 

அடிக்கடி ரமேசும் காயத்ரியும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது ரமேஷின் வீட்டுக்கும் காயத்ரியின் உறவினர்களுக்கும் தெரியவந்தது. இதனை அடுத்து வேலைக்கு செல்ல வேண்டாம் என்று காயத்ரியை வீட்டில் இருக்க வைத்துள்ளார் கணவர்.

இதனால் விரக்தி அடைந்த இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மாயமாகினர்.  இந்நிலையில் விருதாச்சல் தொட்டிகுப்பத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரமேஷும், காயத்ரியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.