தி.மு.க. பேரணிக்கு தடை வருமா? உதயநிதியை கைது செய்ய கோரிக்கை!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 23-ம் தேதி நடக்க இருக்கும் திமுகவின் பேரணியை தடை செய்ய வேண்டும் என்றும், வன்முறையைத் தூண்டும் உதயநிதியை கைது செய்ய வேண்டும் என்று த.மா.காங்கிரஸை சேர்ந்த யுவராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரணி நடைபெறுவதாகவும் அதற்கு கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளம் மூலம் அவர்கள் இயக்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்பில் போராட்டத்தைக் கண்டு வன்முறை என்று அஞ்சும் வசதியான, வயது முதிர்ந்தவர்களை வீட்டிலேயே விட்டு வரும்படி உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

இது ஏதோ திட்டமிட்டு, அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இன்னும் பிற மதத்தினர் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்ற வேளையில் வடகிழக்கு மாநிலம் போல் தமிழகத்தை கலவரக் காடாக மாற்ற, தமிழகத்தின் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செய்யும் சதியாகத் தெரிகிறது. 

அதனால், உதயநிதியை கைது செய்வதுடன், தி.மு.க. போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஆளும் கட்சியுடன் இணைந்து செல்வதால், எதையாவது சொல்லி பேர் வாங்கப் பார்க்கிறார் யுவராஜ் என்று அவரது சொந்தக் கட்சியினரே வம்பு இழுக்கிறார்கள்.