செல்போனில் பேசிக் கொண்டிருந்த இளம் கர்ப்பிணி..! பின்னால் வந்து அந்த இடத்தில் தட்டிய இளைஞன்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

ஐதராபாத்: கர்ப்பிணி பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.


ஐதராபாத், மாதப்பூர் போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட அய்யப்பா சொசைட்டி பகுதியில் வசிப்பவர் சந்திரகாந்த். மென்பொறியாளராக அமெரிக்காவில் பணிபுரிந்த இவர், சமீபத்தில் நாடு திரும்பினார். வேலையின்றி இருந்த சந்திரகாந்த், கடந்த சனிக்கிழமை இரவு, ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் கர்ப்பிணி பெண், அவரது கணவருடன் சாப்பிட வந்துள்ளார்.  

சந்திரகாந்தின் முன்புறம் உள்ள இருக்கையில் அந்த பெண் அமர்ந்து சாப்பிட்ட நிலையில், பின்னால் இருந்த சந்திரகாந்த், கை, காலால் அந்த பெண்ணை பாலியல் சீண்டல் செய்திருக்கிறார். இதில், ஆத்திரமடைந்த கர்ப்பிணி பெண் உடனடியாக, திரும்பி ஓங்கி அறைந்தார். பின்னர் சத்தம் போடவே, ஓட்டல் பணியாளர்கள் ஓடிவந்து, சந்திரகாந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.