ஓடும் காரில் குடிபோதையில் பிரபல நடிகை செய்த விபரீத செயல்! மடக்கி பிடித்த போலீஸ்!

நடிகை பூஜா ஹெட்ஜ் மும்பையை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 28 வயதாகிறது.


கடந்த 2012ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி இருப்பார். அதன் பின்னர் ஒரு சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார்.

 தற்போது ஹிந்தியில் மிகப்பெரும் ஹிட் ஆன ஹவுஸ்ஃபுல் படத்தின் நான்காம் பாகத்தில் நடித்து வருகிறார் பூஜா. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்

 இந்நிலையில் கடந்த புதன்கிழமை தனது காரை தாறுமாறாக ஓட்டி சென்று ஹைதராபாத்தில் போலீசாரிடம் சிக்கியுள்ளார் பூஜா. உடனடியாக இந்த செய்தி மிகப்பெரும் வைரல் ஆனது. பின்னர் உண்மையை விசாரித்ததில் அந்த காரை ஓட்டியது பூஜை இல்லை. ,அவரது மேனேஜர் தான் என தெரியவந்துள்ளது.

இதனால் அவர் போலீஸில் மாட்டவில்லை எனவும் அவரது மேனேஜர் தான் போலீசில் மாட்டி உள்ளார் எனவும் தற்போது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று சிக்கிய பிறகு நடிகை தனது செல்வாக்கை பயன்படுத்தி மேனேஜரை மாட்டிவிட்டு தப்பிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.