லிஃப்ட்! செக்ஸ்! கொலை! சைக்கோ சீனிவாசனிடம் சிக்சிய 2 மாணவிகள்! பிறகு நேர்ந்த பயங்கரம்!

இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் தருவதாகக் கூறி மாணவிகளை ஏமாற்றி ரேப் செய்து கொன்று குவித்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள யாதகிரி மாவட்டத்தின் ஹாஜிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி சமீபத்தில் காணாமல் போனார். இதுபற்றி அவரது பெற்றோர் போலீசில் புகார் தரவே, சிறுமி வைத்திருந்த கைப்பை, அந்த ஊரின் பாழடைந்த கிணறு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கிணற்றில் தீயணைப்பு வீரர்களை உதவியுடன், போலீசார் தோண்டி பார்த்தனர். அங்கு, சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது தெரியவந்தது. 

இதன்பேரில், கிணற்றின் உரிமையாளர் சீனிவாசனை போலீசார் விசாரித்தனர். அவர் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாக ஒப்புக் கொண்டார். இது மட்டுமில்லை. அந்த பள்ளி மாணவி போல, மேலும் பல மாணவிகளை இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் தருவதாகக் கூறி, இந்த கிணற்றுக்கு அழைத்து வந்து, ரேப் செய்து கொன்று, புதைத்துள்ளதாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பேரில், கிணற்றை மேலும் ஆழமாக தோண்டிய போலீசார், மேலும் சில எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர். இதையடுத்து, சுற்றுப்புற பகுதிகளில் மாயமான பள்ளி, காலேஜ் படிக்கும் மாணவிகள் மற்றும் இளம்பெண்களின் வழக்குகள் அனைத்திலும் சீனிவாசனுக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, சீனிவாசனின் வீட்டை, கிராம மக்கள் தீ வைத்து கொளுத்தியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.