எங்ககிட்ட பேசவே விடல..! இப்போ செத்துட்டானு சொல்றாங்க..! அமெரிக்க மாப்பிள்ளைக்கு பெண்ணை கொடுத்த பெற்றோரின் கதறல்..!

நியூயார்க்: ஐதராபாத் பெண் அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக, அவரது குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.


ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர், அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜீனியராக பணிபுரிகிறார்.  42 வயதாகும் சிவகுமாருக்கு, 38 வயதில் காஜம் வனிதா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், வனிதாவுக்கும், சிவகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஐதராபாத் அருகே உள்ள நாகோல் பகுதியில் , தனது பெற்றோருடன் வனிதா தனித்து வசித்து வந்தார். எனினும், சிவகுமாரின் வற்புறுத்தலை தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் வனிதா அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த ஜூலை மாதத்திற்குப் பின், வனிதாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், அவரது பெற்றோர் சந்தேகமடைந்து, அமெரிக்காவில் உள்ள தங்களது உறவினர்கள் மூலமாக, வனிதாவை தொடர்புகொள்ள முயன்றனர். அப்போது, வனிதா தற்கொலை செய்துகொண்டதாக, தகவல் கிடைத்திருக்கிறது. சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து வனிதாவை டார்ச்சர் செய்ததால் இந்த தற்கொலை நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்பேரில், வனிதாவின் பெற்றோர் ஐதராபாத் போலீசில் புகார் செய்துள்ளனர். இதையேற்று, சிவகுமாரை விசாரணைக்கு வரும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.