50 லட்சம் ரூபாய் வேண்டும்..! ஐதராபாத் பெண் டாக்டர் மகளை பறிகொடுத்த தந்தையின் புதிய எதிர்பார்ப்பு!

ஐதராபாத் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நபர்களில் ஒருவரின் உறவினர் உச்ச நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கோரியுள்ளார்.


தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி, சமீபத்தில் இரவு நேரத்தில் காணாமல் போனார். அவரை லாரி டிரைவர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்று பலாத்காரம் செய்துவிட்டு, பின்னர் அடித்துக் கொன்று, சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, விசாரணையில் தெரியவந்தது.

இதன்பேரில், 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களை திடீரென தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறி, என்கவுன்டர் செய்தனர். இச்சம்பவத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஒருவரது உறவினர் நஷ்ட ஈடு கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.  

அவர் தாக்கல் செய்த மனுவில், 'உரிய விசாரணை நடத்தாமல் போலீசார் போலியான முறையில் இந்த என்கவுன்டரை நடத்தியுள்ளனர். அவர்கள் சொல்வதில் முழு உண்மை இல்லை. மேலும், என்கவுண்டர் செய்ததற்கு போலீசார் சொல்லும் காரணமும் ஏற்கும்படியாக இல்லை. இந்த என்கவுண்டரில் பாதிக்கப்பட்ட 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,' என்று கூறியுள்ளார்.