14 ஆண்டுகள்! நன்றியோடு சுற்றி வந்த நாய்! திடீரென மரணம்! ஊரே கூடி இறுதிச் சடங்கு செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

ஐதராபாத்: இறந்துபோன நாய்க்கு மேள தாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தி, மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகரில் உள்ள போயகாலி காலனியில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, ஒரு நாயை ஷியாம் எனப் பெயரிட்டு, காலனி மக்கள் அனைவரும் பாசத்துடன் வளர்த்துள்ளனர்.

அந்த காலனியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 14 ஆண்டுகளாக, அந்த நன்றியுடன், பாதுகாப்பாகவும், விசுவாசமாகவும் இருந்து வந்துள்ளது. சில நாள் முன்பாக, விபத்தில் சிக்கி காயமடைந்த ஷியாம், உடல்நலம் பாதிக்கப்பட்டது. நாயை கால்நடை மருத்துவமனை அழைத்துச் சென்ற சிகிச்சை அளித்தபோதும் பலனின்றி உயிரிழந்துவிட்டது.

இதையடுத்து,  போயகாலி காலனி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, நாய்க்கு கதறியழுத படி வண்டி ஏற்பாடு செய்து, மாலை, மரியாதை செலுத்தி, மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தி, உடலை நல்லடக்கம் செய்தனர். இச்சம்பவம், இன்றைய அவசர உலகில் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்றால் அது மிகையல்ல.