ஆண்களுக்கு கர்ப்ப பரிசோதனை..! பெண்களுக்கு காண்டம் அணிய பரிந்துரை..! விநோத மருத்துவமனையின் விபரீத டாக்டர்!

ஐதராபாத்: வயிறு வலிப்பதாகக் கூறிய இளைஞர்களை, கருப்பை பரிசோதனை செய்யும்படி டாக்டர் ஒருவர் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் கஞ்சு மற்றும் கோமேஸ்வர் ஜங்கு. இவர்கள் வயிற்று வலி காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனை சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த முகேஷ் குமார் என்ற டாக்டர், இளைஞர்கள் இருவரையும் கர்ப்ப பை பரிசோதனை, எச்ஐவி மற்றும் ஹீமோகுளோபின் டெஸ்ட் செய்யும்படி கூறியுள்ளார்.  

இதனால், அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் 2 பேரும் இதுபற்றி சத்ரா மாவட்ட சிவில் சர்ஜனிடம் புகார் அளித்தனர். இதுபற்றி துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

சில மாதங்களுக்கு முன்பாக, ஜார்க்கண்டில் வயிற்று வலி எனக் கூறிய பெண்ணை காண்டம் உபயோகிக்கும்படி டாக்டர் ஒருவர் கூறியிருந்தார். தற்போது இளைஞர்களை ஒருவர் கருப்பை பரிசோதனை செய்ய சொல்லியுள்ளார். சரியாக படிக்காமல் டாக்டர் வேலைக்கு வரும் இதுபோன்ற டுபாக்கூர் ஆசாமிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.