ஐதராபாத்: சுயநலத்திற்காக பெற்ற தாயை கொன்ற இளம்பெண், அவருக்கு ஐடியா கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதல்..! உடல் உறவு..! கர்ப்பம்..! கற்பழிப்பு..! பிளாக்மெயில்..! தாயை கொலை செய்த மகள் வழக்கின் புதிய திருப்பம்..!

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் கோத்தா சசிகுமார். 28 வயதாகும் சசிகுமாருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனவே, வெட்டியாக ஊர் சுற்றி திரிந்த சசிகுமார், அண்டை வீட்டில் வசிக்கும் ரஜித்தா என்ற பெண்ணின் சொத்துகளை அடைய தீர்மானித்தார். ரஜித்தாவிற்கு சொந்தமாக அபார்ட்மென்ட், சொந்த கிராமத்தில் நிலம், வீடு என நிறைய சொத்துகள் இருந்துள்ளன. இதுதவிர, ரஜித்தாவிற்கு பருவ வயது மகள் ஒருவரும் உள்ளார்.
அந்த இளம்பெண், பால் ரெட்டி என்ற இளைஞனுடன் நெருங்கிப் பழகியதில் கர்ப்பம் தரித்துள்ளார். இதனை வெளியில் தெரியாமல் மறைக்க நினைத்த அப்பெண், சசிகுமாரின் உதவியை நாடியுள்ளார். இதுதான் சமயம் என ரஜித்தாவின் மகளுக்கு அடைக்கலம் கொடுத்த சசிகுமார், அவரின் கருவை கலைக்கவும் உதவி புரிந்தார்.
இந்த விசயத்தை வெளியில் சொல்லக்கூடாது என ரஜித்தாவின் மகள் கேட்க, 'அப்படி சொல்லாமல் இருக்க வேண்டுமெனில் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்,'' எனக் கூறி சசிகுமார் அந்த இளம்பெண்ணை மிரட்ட தொடங்கியிருக்கிறார். இதன்படி, ஒரு கட்டத்தில் இளம்பெண்ணை ஆசை தீர பலமுறை பலாத்காரம் செய்த சசிகுமார் பிறகு, அவரது தாய் ரஜித்தா வைத்துள்ள சொத்துகளை அடைய திட்டமிட்டார். ரஜித்தாவை கொல்லும்படி அவரது மகளையே சசிகுமார் ஏவிவிட்டார்.
தனது அந்தரங்கம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக, சசிகுமார் சொன்னதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ரஜித்தாவை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். ஆனால், அவரது சடலத்தை என்ன செய்வதென தெரியாமல் தவித்துள்ளனர். நாளுக்கு நாள் சடலம் அழுக தொடங்கவே, விசயம் வெளியில் கசிந்து, வேறு வழியின்றி இருவரும் போலீசில் சிக்கிக் கொண்டனர்.