மனைவியை மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று நண்பனுடன் சேர்ந்து கணவன் செய்த செயல்! சிசிடிவியில் சிக்கிய பயங்கரம்!

தருமபுரி: விவாகரத்து பெற்ற மனைவியை ஆள் வைத்து கடத்திக் கொன்ற முன்னாள் கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், கடந்த ஜூலை 28ம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு பெண் சடலம் மீட்கப்பட்டது. இதுபற்றி காரிமங்கலம் தனிப்படை போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா ஒன்றை ஆய்வுசெய்தபோது, ஒரு காரில் வந்த நபர்கள், பெண் சடலத்தை தீ வைத்து எரிப்பதை கண்டறிந்தனர். 

அதில் தெரிந்த காரின் பதிவு எண்ணை வைத்து, கர்நாடகா மாநிலம், நேனனங்கலா பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில், 20 ஆண்டுகளுக்கு முன், கவுரம்மா என்பவரை விவாகரத்து செய்த லோகேஷ், அவருக்கு மாதந்தோறும் நீதிமன்ற உத்தரவின் படி, குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சம் வழங்கி வந்திருக்கிறார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, ஜீவனாம்சம் தருவதை லோகேஷ் நிறுத்திவிட்டாராம். இதன்பேரில், கவுரம்மா மீண்டும் நீதிமன்றத்தை நாட, வேறு வழியின்றி, நிலத்தை விற்று காசு தருவதாகக் கூறிய லோகேஷ், கவுரம்மாவை தனியிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு தனது நண்பருடன்  சேர்ந்து கவுரம்மாவை அடித்துக் கொன்று, சாக்கு மூட்டையில் சடலத்தை கட்டி, காரில் எடுத்துக் கொண்டு, தர்மபுரி வந்து, தீ வைத்துக் கொளுத்திவிட்டு, தப்பியோடிவிட்டதாக, போலீசில் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, லோகேஷ் , அவரது நண்பன் அனுமந்தப்பா ஆகியோரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், சேலம் சென்ட்ரல் சிறையில் அடைத்தனர்.