மனைவியை பட்டினி போட்டு உடல் எடையை 20 கிலோவாக்கிய கொடூர கணவன்! அதிர வைக்கும் காரணம்!

கேரளாவில் கடந்த சில மாதங்களாக மருமகளுக்கு உணவாக தண்ணீர் மட்டுமே கொடுத்து வந்துள்ள கணவர் மற்றும் மாமியாரின் வெறிச்செயல்..!


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில்   ஓயூர் பகுதியில்  தன் மனைவிக்கு கடந்த சில மாதங்களாகவே வெறும் தண்ணீர் மட்டுமே உணவாகக் கொடுத்து  வந்துள்ள கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்லம் பகுதியில் வரதட்சனை கொடுமை காரணமாக தன் வீட்டிற்கு வந்த மருமகளுக்கும் உணவுக்கு பதிலாக காலை மதியம் மற்றும் இரவு நேரங்களில் வெறும் தண்ணீரை மட்டுமே உணவாக கொடுத்து வந்துள்ளனர். காலை ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் மதியம் சிறிதளவு சாப்பாடும் மற்றும் இரவு நேரங்களில் வெறும் தண்ணீரை மட்டுமே கொடுத்து வந்துள்ளனர்.

கடந்த 6 வருடங்களுக்கு முன் கேரளாவைச் சேர்ந்த சந்து லால் மற்றும் துஷாரா ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் கணவர்  வீட்டில் வசித்து வந்தனர்.இவர்களுக்கு இரு குழந்தைகளும் உண்டு.

திருமணத்தின் போதும மனமகளின் வீட்டார் 2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் திருமணத்திற்கு தேவையான நகைகளையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இது போதாதென்று இன்னும் அதிகமாக வரதச்சனை வேண்டும் எனக் கேட்டு துஷாராவை துன்புறுத்தியுள்ளனர்.இதைத்தொடர்ந்து துஷாரா வீட்டிலிருந்து யாரும் வராத நிலையில் ஆத்திரம் அடைந்த கணவர் மற்றும் மாமியார் துஷாராவிற்கு உணவு ஏதும் கொடுக்காமல் ஒரு தனி அறையில் பூட்டி வைத்தனர். அவருக்கு வெறும் தண்ணீர் மட்டுமே உணவாக கொடுத்து வந்துள்ளனர்.

திருமணமான போது 60 கிலோ எடை இருந்த துஷாரா தற்போது 40 கிலோ மட்டுமே உள்ளார். இந்நிலையில் மிகவும் மோசமான நிலையில் இருந்த துஷாராவை பார்த்த அருகில் இருந்தவர்கள் போயபள்ளி போலீசில் தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் துஷாராவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் உடலில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.துஷாராவை அடித்தும் துன்புறுத்தியதாக தெரிகிறது.

உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் துஷாரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது அவர் வெறும் 20 கிலோவாக இருந்ததாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையின்போது கடந்த சில மாதங்களாகவே துஷாராவை பார்க்க யாரையும் அனுமதிப்பது இல்லை என்பதும் பெண் வீட்டார் போன் செய்தாலும் துஷாராவை பேசவும் விடுவதில்லை என போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளது.. வரதட்சணைக்காக தனது சொந்த மருமகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதைத்தொடர்ந்து கணவர் மற்றும் மாமியாரை வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மற்றும் அவர்களின் இரு குழந்தைகளையும் கொல்லம் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.