மகாராஷ்டிர மாநிலத்தில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் இரவு முழுவதும சடலத்துடன் படுத்திருந்த நிலையில் காலையில் காவல்துறையில் சரணடைந்தார்.
கர்ப்பிணி மனைவி கொடூர கொலை! சடலத்துடன் ஒரு நாள் இரவு குடும்பம் நடத்திய கணவன்!
உஸ்மானாபாத் மாவட்டம் உமெர்காவைச் சேர்ந்தவர், வினோத் த் தன்சிங் பவார் போர்வெல் கமிஷன் ஏஜெண்டான இவருக்கும், செவிலியரான பிரியங்கா ரத்தோட் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் பிரியங்கா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வினோத் பிரியங்காவை கழுத்தை நெறித்ததில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் காலையில் வினோத் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இரவு முழுவதும் வினோத் பிரியங்காவின் சடலத்துடனேயே படுத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பிரியங்காவின் தாய் வீட்டில் இருந்து பணம் வாங்கிக் கொண்டுவருமாறு கூறி வினோத் தகராறில் ஈடுபட்டதாகவும், கொலை செய்ததாகவும் பிரியங்காவின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இரவு முழுவதும் சடலத்துடன் குடும்பமா நடத்தினாய்?
என்று போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.