அத்தை மகளோடு தகாத உறவு! தனிக்குடித்தனம்! கணவனின் லீலைகளை கண்டுபிடித்த மனைவிக்கு ஏற்பட்ட பயங்கரம்! கொடைக்கானல் பரபரப்பு!

அத்தை மகளுடன் பழகுவதை கண்டித்த மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பேத்துப்பாறையை சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் கீர்த்தனா என்பவருக்கும் 2013ல் திருமணம் ஆன நிலையில் ஒரு வருடத்திலேயே வாழ்க்கை கசந்து போனதால் விவாகரத்து ஆனது. பின்னர் ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட வினோத்குமார் கும்பூர்வயல் பகுதியில் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

இதற்கிடையே தேனி மாவட்டம் தாமரைகுளத்தில் வசிக்கும் அத்தை மகள் வேளாங்கண்ணியுடன் விநோத்குமாருக்கு கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. கணவரை இழந்த வேளாங்கண்ணியுடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார் வினோத்குமார். இவர்களின் முறையற்ற உறவு வினோத்குமாரின் 2வது மனைவியான ஜெனிபருக்கு தெரியவர கணவரை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விநோத்குமார் ஜெனிபரை கொன்று விட்டு வேளாங்கண்ணியுடன் உல்லாச வாழ்க்கை வாழ திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே கும்பூர்வயலுக்கு வந்த வேளாங்கண்ணி அங்கிருந்த ஜெனிபருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஜெனிபரின் கை, கால்களை விநோத்குமார் பிடித்துக்கொண்டார். ஜெனிபரின் வாய், மூக்கை வேளாங்கண்ணி பொத்திக் கொண்டதில் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஜெனிபர்.

இதையடுத்து ஜெனிபரின் உடலை துணியில் கட்டி அருகில் உள்ள துணி துவைக்கும் இடத்தின் முற்றத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவர இருவரையும் தேனி மாவட்டத்தில் பதுங்கி இருந்தபோது கைது செய்தனர்.