மனைவியை மாமனார்களுக்கு விருந்தாக்கிய விபரீத கணவன்! இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

இளம்பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து, அவரது கணவன் உள்பட பலர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஏப்ரல் 19ம் தேதி போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், உள்ளூர் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளரை சந்தித்து, அந்த பெண் முறையிட்ட பிறகே, அவரது கணவன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த பெண் மேலும் கூறுகையில், ''எனது கணவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எனது மாமனார், அவரது சகோதரர்கள் மற்றும் எனது மைத்துனர்கள் என அனைவரும் எனக்கு மயக்க மருந்து கொடுத்து, பலமுறை பலாத்காரம் செய்தனர்.

இதுபற்றி வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் எனவும் மிரட்டினர். ஆனால், எனது கணவர் இதுபற்றி எதுவும் கேட்கவே இல்லை. தொடர்ந்து, அவரும் என்னை பலாத்காரம் செய்துவந்தார். இதனால், எனது தாய் வீட்டிற்கு ஓடிவந்து விட்டேன்,'' எனக் கூறியுள்ளார்.