சீனாவில் வேலை பார்த்து இருந்த வந்த கணவனுக்கு அதிர்ச்சி!! மரண படிக்கையில் இருந்து உயிர் தப்பிய மனைவி!! நடந்தது என்ன?
நான் கூப்பிட்டா என்னை பாக்குறா..! ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியல..! புத்தம் புது மனைவிக்கு நேர்ந்த பயங்கரத்தை கூறி அதிரும் இளம் கணவன்! ஈரோடு பரிதாபம்!
சீனாவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ள அவருக்கு கல்யாணம் முடிந்து சில நாட்கள் ஆனா நிலையில், திடீரென வந்த போன்னால் அதிர்ச்சியில் உரைத்தார். விபத்தில் அவரது மனைவி உயிருக்கு போராடிய கொண்டு இருக்கும் செய்தி தான் அது. பின்னர் கடவுள் அருளால் மரண படிக்கையில் இருந்து உயிர் தப்பிய மனைவி.
ஈரோட்டை சேர்ந்தவர் அருண் என்பவர் சீனாவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். இந்நிலையில், இவருக்கு சுதா என்பவருடன் கடந்த 2019 செப்டம்பர் மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது. சுதா BE படித்துவிட்டு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையில், திருமணம் முடிந்த சில நாட்களில், லீவு முடிந்து அருண் சீனாவுக்கு திரும்பியுள்ளார். பின் அங்கு போய் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து கொண்டு இதன்பிறகு தனது மனைவியை அழைத்து கொள்வதாக கூறிவிட்டு கிளம்பி சீனாவிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு சென்று தனது மனைவிக்காக புது வீடும் பார்த்தாகிவிட்டது. ஒரு வாரம் கழித்து சீனா வருவதற்கான ஃபிளைட் டிக்கெட்டையும் அருண் ரிசர்வ் செய்துள்ளார்.
இதற்கிடையில், சீனா செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 15-ம்தேதி சுதா அவரது சகோதரருடன் பைக்கில் சென்றிருக்கிறார். ஈரோடு பேருந்து நிலையத்தின் அருகே செல்லும்போது திடீரென பைக்கில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துவிட்டார் . பின்னர் இந்த விபத்தில் சுதா பின்பக்கமாக விழுந்ததில் சுதாவின் வலது புற தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.
விபத்தை கண்ட ஒரு போக்குவரத்து காவல்துறையினர் ஓடிவந்து சுதாவை மீட்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அனுமதிக்க செய்துள்ளார். இதனை அடுத்த பதினைந்தே நிமிடங்களில் தன் சுயநினைவை இழந்தார் சுதா.
சுதாவின் நிலைமையை பார்த்ததும், உடனடியாக ஈரோடு செந்தில் நரம்பியல் மருத்துவமனைக்கு (Senthil multispeciality hospital in Erode) அழைத்து செல்லுமாறு அங்கிருக்கும் மருத்துவர்கள் சொல்லவும், சுதாவை அதன்படியே வந்து அவரச சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அந்த மருத்துவமனையில் டாக்டர் ஹரிநிவாஸ் (MBBS., DNB (Neuro surgery),MNAM என்பவர், வேறு ஒரு மூளை ஆபரேஷன் செய்தார். இந்த விபத்து நடந்தது மாலை 5 மணிக்கு என்றால் அடுத்த 2 மணி நேரத்திற்குள் சுதா ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். பின்னர் வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்தது.
சுதா உயிர்பிழைத்தார். ஆனால் 9 நாட்களுக்கு பிறகு தான் கண் விழித்தார். ஆனால் இன்னும் நினைவு மட்டும் திரும்பவில்லை. சுதாவை பார்த்த கணவன் உறைந்து போனார். மேலும், கடந்த 3 மாதங்களாக பக்கத்திலேயே இருந்து கவனித்து வருகிறார் கணவர் அருண். என் மனைவி மீண்டும் என்னை கூப்பிடுவள் அதற்கா நான் காத்து கொண்டு இருக்கிறேன். என்று கூறுகிறார் அருண். மனைவின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். கடவுள் அருளால் தனது மனைவி உயிர் பிழைத்தது எனக்கு மகிழ்ச்சி எனவும் இனி நாங்கள் புதிய வாழ்க்கை தொடங்க உள்ளதாக தெரிவித்தார் அருண்.