கணவனை இழந்த அண்ணி மீது ஆசை! மைத்துனர் அரங்கேற்றிய வெறிச்செயல்!

சென்னையில் கணவனைப் பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண்ணிற்கு அப்பெண்ணின் மைத்துனர் மணிகண்டன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.


அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை அரிவாளால் சரமாரியாக தாக்கி விட்டு தலைமறைவாகியுள்ளார்,அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மடுவங்கரை, மசூதி காலனியைச் சேர்ந்தவர் பானுப்பிரியா இவருக்கு திருமணமாகி சில ஆண்டுகளே ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவரது கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து தனது இரண்டு குழந்தைகளுடன் பானுப்பிரியா தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குன்றத்தூரை சேர்ந்த பானுப்பிரியாவின் மைத்துனர் அவர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார். அவ்வப்போது வீட்டிற்கு வருவதும் வந்து குழந்தைகளை கவனித்துக் கொண்டுள்ளார். தான் தனிமையில் இருக்கும்போது மணிகண்டன் வந்து உதவுவதை பானுப்பிரியா தனக்கு உதவி செய்கிறார் என நம்பி அவரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.

 பின்னர் ஒரு நாள் மணிகண்டன்  மது போதையில் வந்து பானுபிரியாவிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அதை பானுப்பிரியா தடுத்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த அவர் அருகில் இருந்த அரிவாளை எடுத்து பானுப்பிரியாவின் கை மற்றும் தலைப்பகுதியில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பானுப்பிரியா கூச்சலிட்டபோது அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து கிண்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த பானுப்பிரியாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் வருவதை அறிந்த அப்பெண்ணின் மைத்துனர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் அவரது  தீவிரமாக தேடி வருகின்றனர்.