5 வருடங்களாக குழந்தையின்மை! மனைவிக்காக கணவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னையில் திருமணமாகி 5 வருடங்களாகியும், குழந்தை இல்லாத காரணத்தினால் மன உளைச்சலில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அம்பத்தூரில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வரும் தம்பதியினர்- ராஜ் – மோகனப்பிரியா. இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணமாகியது , நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மோகனப்பிரியா கருவுற்றுள்ளார்.

குழந்தை பிறக்கவுள்ள சந்தோஷத்தில் இருந்தவர்களூக்கு, சில மாதங்களில் அந்த கரு கலைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்தது. இதனால் இருவரும் ஆழ்ந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த புதன் கிழமை மனைவி மோகனப்பிரியா மருத்துவ மனைக்கு சென்றிருந்த போது கணவர் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சமப்வம் பெரும் அதிர்ச்சியாக மாறிது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் ராஜ் தற்கொலைக்கு முன்னதாக மனைவி மோகனபிரியாவிற்க்கு விட்டு சென்ற வாய்ஸ் ரெக்கார்டு கேட்டபோது மனதை உருக வைப்பதாக உள்ளது.