கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த கவுன்சிலர் மனைவி! கையும் களவுமாக பிடித்த கணவன்!

நாகர்கோவிலில் கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த கவுன்சிலர் மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்துள்ளார்.


நாகர்கோவிலை சேர்ந்தவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பிரபல அரசியல் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இவரது மனைவி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) கணவன் மனைவியான சுரேஷ் – சுதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது தனது மனைவி சுதாவை கவுன்சிலர் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்தார் சுரேஷ். இதனை தொடர்ந்து கவுன்சிலரான சுதா கணவரை மீறி பல்வேறு செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.

தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து சுதா செயல்பட்டதால் சுரேஷ் உடன் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது சுதாவுக்கு குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனையும் அறிந்து மனைவி சுதாவை பல முறை சுரேஷ் கண்டித்துள்ளார். ஆனால் அதனை எல்லாம் சுதா பொருட்படுத்தவே இல்லை. இதனை தொடர்ந்து காவல் நிலையத்திலும் குமார் குறித்து சுரேஷ் புகார் அளித்தார். ஆனால் அங்கும் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் தனது மனைவி கள்ளக்காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருக்கும் தகவல் அண்டை வீட்டார் மூலமாக சுரேஷ்க்கு தெரியவந்துள்ளது. உடனடியாக காவல் நிலையம் சென்ற அவர் போலீசாரை கையோடு கூட்டி வந்து வீட்டின் மற்றொரு சாவி மூலம் கதவை திறந்துள்ளார்.

உள்ளே கவுன்சிலர் சுதாவும் கள்ளக்காதலன் குமாரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளான். ஆனால் அவனை பிடித்து சுரேஷ் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறிவிட்டு போலீசார் சென்றுவிட்டனர். மேலும் குமாருடன் இருப்பது தனது தனிப்பட்ட விஷயம் என்று கூறி போலீசாரை அங்கிருந்து விரட்டியுள்ளார் சுதா. இதனால் அவர் வீடு இருந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.