மதுரையில் குடும்ப சண்டையால் மனைவியை பிரிந்து வாழும் கணவன் தனது குழந்தைகளுக்கு தனது மனைவி நடத்தும் காதணி விழாவுக்கு உறவினர்கள் செல்ல வேண்டாம் என போஸ்டர் ஒட்டிய விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
என் பொண்டாட்டி என்ன விட்டுட்டு போய்ட்டா! போஸ்டர் அடித்து ஒட்டிய கணவன்! மதுரை சம்பவம்!
மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் கர்ணன். கருத்து வேறுபாடு மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி தங்கள் குழ்ந்தைக்கு காதணி விழாவுக்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் அறிந்த அவர், மனைவி நடத்தும் காதணி விழாவில் தன்னை சார்ந்த உறவினர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டினார்.
மதுரை செல்லூர் மேலத்தோப்பில் வசிக்கும் செ.கர்ணன் ஆகிய நான் கொடுக்கும் பொது அறிவிப்பு என்ற முன்னுரையுடன் தொடங்கும் அந்த போஸ்டரில் தனது மனைவி சந்தியாவை தான் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தனது பிள்ளைகளுக்கு காதணி விழா நடைபெறுவதாகவும், அந்த விழாவுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னைச் சார்ந்த உறவுகளும், தான் ஏற்கனவே செய்முறை செய்தவர்களும் அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நகைச்சுவையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.