ஆத்தாடி! ஒரு முழு முதலையை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்ட பாம்பு! வைரல் புகைப்படம்!

ஆஸ்திரேலியாவில் அவன் கொண்ட பாம்பு ஒன்று முதலையை விழுங்கிய புகைப்படங்கள் வேகமாகப் பரவி வருகின்றன.


ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வனப்பகுதியில் புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கண்களுக்கு விசித்திரமான ஒரு சம்பவம் தென்பட்டது.

நீர் நிலையில் இருந்த ஒரு முதலையை அனகோண்டா கவ்விக்கொண்டிருந்த சம்பவம் தான் அது. பொதுவாக அதிக பலம் வாய்ந்த விலங்காக முதலை பார்க்கப்படுகிறது.

அதன் தாடை, உடல் அமைப்பு, உருளும் வேகம் ஆகிய அனைத்தும் முதலையை ஒரு கொடிய விலங்காக நமக்கு காட்டும். அப்படிப்பட்ட ஒரு விலங்கையே அனகோண்டா சுருட்டி விழுங்கியது.

இந்த அனகோண்டா வானது ஆலிவ் வகையைச் சார்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய அனகோண்டாவாகவும் இது உள்ளது. இந்த வகை அனகோண்டாக்கள் 13 அடி உயரம் வரை வளரக்கூடியவை.