கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு "நோ" சொன்ன ரஜினி அமித்ஷாவுக்கு மட்டும் "எஸ்" சொன்ன ரகசியம்!

கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தபோது உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், இருவருமே ஆப்செண்ட்.


அதேபோன்று வெங்கய்யா நாயுடு எழுதிய புத்தக விழாவுக்கும் இரண்டும் உச்ச நட்சத்திரங்களுக்கும் விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இதில் ரஜினிகாந்த் ஓடோடி வந்து கலந்துகொள்ள, கமல் புறக்கணித்து இருக்கிறார்.

இன்றைய விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பா.ஜ.க.வின் பக்காவான ஆதரவாளர் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதியாகத் தெரிவித்து இருக்கிறார் ரஜினி.

நதி நீர் இணைப்பு, ஆன்மிக அரசியல், கார்ப்பரேட்களுக்கு ஆதரவு நிலை, போராட்டங்களுக்கு எதிர்ப்பு போன்றவற்றுடன் காஷ்மீர் சிறப்புச்சட்டம் ரத்து உள்ளிட்ட  பா.ஜ.க.வின் செயல்களுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து வருகிறார் ரஜினி.

இந்த நிலையில் ரஜினி தனியே கட்சி ஆரம்பித்து என்ன செய்யப்போகிறார், அவர் பா.ஜ.க.வின் சேர்ந்தாலே போதுமே என்ற குரல் எழுகிறது. என்னப்பா ரஜினி ரசிர்களே இவங்க சொல்றது சரியாத்தானே இருக்குது!