நாம் உண்ணும் உணவு விஷமாவது எப்படி? தெரிந்து கொண்டு உண்ணுங்கள்!

அசுத்தமான உணவை சாப்பிடுவது உணவு நோய்த்தொற்று அல்லது உணவை விஷமாக மாற்றுவது உணவுப்பழக்க நோய் என்று அழைக்கப்படுகிறது.


உணவு நோய்த்தொற்றுக்கு பாக்டீரியாக்களே மிகவும் பரவலான காரணமாக உள்ளது, அதே நேரத்தில் ஒட்டுண்ணிகளும் காரணமாக இருக்கிறது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. பொதுவாக இது இறைச்சி, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பாலை அதிகம் தாக்குகிறது. இது கத்தியின், காய்கறி வெட்ட பயன்படுத்தும் பலகை மற்றும் சமைப்பவன் கை போன்றவற்றின் மூலம் பரவுகிறது.

உணவு நோய்த்தொற்று பெரும்பாலும் கோடைகாலத்தில் அதிகம் ஏற்படும். அதற்கு காரணம் கோடைகாலத்தில் உணவுகள் விரைவில் கெட்டுவிடும். மேலும் வெளியிடங்களுக்கு செல்லும்போது பச்சையாகவே அல்லது சரியாக வேகவைக்கப்படாத உணவுகளை சாப்பிடும்போது இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

மாசுபாடு என்பது அதற்கான மூலப்பொருட்களை வளர்ப்பது, அறுவடை செய்வது, சேமிப்பது அல்லது சமைப்பது போன்ற எந்த நிலையில் வேண்டுமென்றாலும் நடக்கலாம். மேலும் வெளிப்புற தூண்டுதல்களாலும் உணவில் அசுத்தம் ஏற்படலாம்.

பொதுவாக சமையலுக்கு உட்படுத்தாத பொருட்கள்தான் அதிக அசுத்தத்திற்க்கு ஆளாகிறது. உடனடியாக சாப்பிடக்கூடிய பொருட்களான சாண்ட்விச், சாலட் போன்ற பொருட்களில் அதிக மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. பாலை குடிப்பதற்கு முன் கொதிக்க வைக்கிறோமோ ஏன் தெரியுமா? ஏனெனில் இந்த வெப்பமாக்கல் முறையில் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகிறது.

உணவு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் வயிற்றுப்போக்கால் அவர்கள் குறிப்பிட்ட அளவு நீர்ச்சத்தை இழந்திருப்பார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் முன் சுத்தமாக கழுவ வேண்டும். அதேபோல நீங்கள் உணவு வைக்க போகும் இடத்தை முன்னரே சுத்தம் செய்ய வேண்டும். இந்த அறிகுறிகள் 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.