பிரசவம் முடிந்த பெண் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

புதிதாக பிறந்த குழந்தையை முழுக்க முழுக்க தாய் மட்டுமே கவனிக்க முடியும். பாலூட்டுதல் தொடங்கி தூங்கவைப்பது வரை தாயின் செயலாகவே இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் தாயின் உடம்பையும் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


குழந்தை அதன் இஷ்டத்துக்கு தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும் என்பதால், குழந்தை தூங்கும்போது தாயும் தூங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பழக வேண்டும்உறவினர்கள், நண்பர்கள் தாயை அதிகநேரம் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தாரின் கடமை.

தாய் ஓய்வு எடுக்கும்போதும் தூங்கும்போதும் யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். அதற்கேற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும். ஆரம்பத்தில் குழந்தை கூடுதல் நேரம் தூங்கும் என்பதால் அந்த நேரத்தில் குளித்தல், சாப்பிடுதல் போன்றவற்றை தாய் மேற்கொள்ள வேண்டும்.

குழந்தை விழித்ததும் தாயின் அரவணைப்பு நிச்சயம் தேவைப்படும். அதனால் எப்போதும் குழந்தையைவிட்டு நீண்டதூரம் செல்ல வேண்டாம்.