ஓஹோன்னு இருக்கும் பிரைவேட் கம்பெனி! அரசுக்கு மட்டும் எப்படி நஷ்டம் வருது..? கேள்வி கேட்க யாரும் இல்லையா?

இன்று தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் கோடிகோடியாக லாபம் ஈட்டிவரும் வேளையில், பி.எஸ்.என்.எல். மட்டும் சம்பளம் போட முடியாமல் தவிக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது என்று திரும்பிப்பார்த்தால் எல்லாமே கொள்ளை என்பது புரியும்.


ஒரு தனியார் பஸ் முதலாளி ஒரு ஓட்டை மினி பஸ்சை ஓட்டி நல்ல லாபம் பார்த்து, ஒரு வருஷத்துக்குள் மீண்டும் ஒரு புது பஸ் வாங்கிவிடுகிறான். ஆனால், ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் இயங்கும் நம் போக்குவரத்துத் துறையில் சம்பளம் போடுவதற்கு பணம் இல்லை.

கூரியர் சர்வீஸ்காரன் ஒரு தபாலுக்கு குறைந்தபட்சம் 58 ரூபாய் வாங்கி குபேரன் ஆகி விடுகிறான். ஆனால் நம் தபால் துறை நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவருகிறது. இத்தனைக்கும் தனியாரைவிட ஆயிரம் மடங்கு பெரிய நெட்வொர்க் கொண்டது இந்திய தபால் துறை. அதே போன்று இப்போது ஆல் இந்தியா ரேடியோவை கேட்பதற்கு யாரும் இல்லை, அரசாங்க சானலான தூர்தர்ஷனை பார்ப்பதற்கும் யாருமில்லை. இந்தியன் ஏர்லைன்சும், ஏர்இந்தியாவும்  தொடர்ந்து நஷ்டம்தான்.

இதற்கு காரணம் என்ன தெரியுமா? நிச்சயமாக ஊழியர்களில்லை. அரசின் திட்டமிட்ட தனியார்  ஊக்குவிப்புத்தான். இப்போது தனியார் ரயில் கொண்டுவந்து, ரயில்வே துறையையும் ஒழித்துக்கட்ட ஆசைப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் நேர்மையான வலிமையான தலைவன் இல்லை என்பதுதான். மேலே சரியாக இருந்தால், கீழேயும் சரியாக இருக்கும். அப்படியொரு நாள் எப்போ வருமோ..?