தி.மு.க. மாவட்டச் செயலாளரின் மன்மத லீலை. 67க்கும் 28க்கும் கல்யாணம். மாணவியை மயக்கியது எப்படி..?

காலம் கடந்து திருமணம் முடித்து அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பெரியாரின் வழியில், தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஒருவருடைய திருமணம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


திருவண்ணாமலை மாவட்டத்தில், சாவல்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் மா.சுந்தரேசன். 67 வயதான இவர் 6 முறை சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துள்ளார். எ.வ. வேலுவின் அதிதீவிர விசுவாசியான இவர், தற்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார்.

இவர்,, ‘சாவல்பூண்டி சங்கப்பலகை,’ என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பேச்சாளர்களை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இந்த அமைப்பின் மூலம் பேச்சாளராக அறிமுகமானவர்தான் 28 வயது இளம்பெண் அபிதா. இவருக்கும் தி.மு.க. நிர்வாகி சுந்தரேசனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது.

இந்த விவகாரம் அறியவந்ததும், சுந்தரேசனின் மனைவியும், மகனும் சேர்ந்து கடந்த மாதம் அபிதாவை அடித்து உதைத்தனர். இனிமேலும் பழக்கம் நீடிக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர்.

ஆனால், சுந்தரேசன் மனைவியைவிட அபிதாவே முக்கியம் என்று முடிவெடுத்த காரணத்தால், அபிதாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஏற்கெனவே திருமணம் முடித்து மகன், மகள் உள்ள நிலையில், இள வயதுப் பெண்ணை திருமணம் முடித்திருக்கும் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

இவரை இனி மேல் எப்படி நம்பமுடியும்? பேச்சுப் போட்டிக்கு ஆள் எடுப்பதாகச் சொல்லி இப்படி பெண்ணையே பிடித்துவிட்டாரே என்று கடுமையாக விமர்சனம் ஓடுகிறது. ஆனால், தி.மு.க. மேலிடமோ, ‘இது தனிப்பட்ட வாழ்க்கை. அதில் தலையிட மாட்டோம்’ என்கிறது.

அதுசரி, அப்படி கை வச்சா, மொத்த கட்சியையும்தான் கலைக்கணும்.