அடிக்கடி தலைவலியா? அதிக வேலையால் உடல் அலுப்பா? இதோ சிறந்த பாட்டி வைத்தியம்!

இன்றைய அவசர உலகில் ஒய்வு என்பதே இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறோம். அதனால் தினமும் தலை வலி உடல் வலி இருந்துகொண்டேதான் இருக்கிறது.


நாம் அதை பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருக்கிறோம். தலை வலியிலிருந்து விடுபட இந்த சில பாட்டி வைத்தியங்களை செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

துளசியை நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் தலை வலி நீங்கும். இஞ்சியை அரைத்து அதனை நீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும்.

பட்டை பொடியைதேனில் குழைத்து சாப்பிட்டால் தலை வலி நீங்கும் . கிராம்பை அவ்வப்போது கடித்து வந்தால் தலை வலிக்கு சுகமாக இருக்கும். புதினா எண்ணெயை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். இவ்வெண்ணெய் கொண்டு ஆவியும் பிடிக்கலாம்.