பொடுகை அழிப்பதற்கு ஷாம்பூவெல்லாம் சரி வராது.. இதை செய்து பாருங்க!

பொடுகை போகுவதற்கெல்லாம் நம்முடைய பாட்டி வைத்தியம் தான் மிகச் சரியான முறை.


தேங்காய் எண்ணையையும் வேப்பெண்ணையையும் கலந்து உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். 30 முதல் 45 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பிறகு வெறும் தண்ணீரால் அலசி விடவும். வாரத்தில் 2 முதல் 3 முறை இந்த சிகிச்சையை பின்பற்றலாம். பூஞ்சைத் தொற்றுக்களைத் தடுக்க வேப்பெண்ணை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆன்டி ஃபங்கல் தன்மை சருமத்தில் செதில்களை குறைத்து எரிச்சலை கட்டுப்படுத்துகிறது. 2 முதல் 3 சொட்டுக்கள் வேப்பெண்ணெய்,  2 முதல் 3 சொட்டுக்கள் தேங்காய் எண்ணெய் .

பாதி வெங்காயத்தை அரைத்து அதன் சாறைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும். உச்சந்தலை முழுவதும் அதை தாராளமாக தடவவும். ஒரு மணி நேரம் அதை அப்படியே விட்டு விட்டு பிறகு அலசி விடவும். வாரத்தில் 2 நாட்கள் இந்த ஜூஸை உங்கள் உச்சந்தலையில் தடவவும். வெங்காயச்சாறு பைட்டோ கெமிக்கல் மூலக்கூறுகள் நிறைந்தது என்றும் இது பொடுகை தடுக்க பெருமளவில் உதவுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை மேற்பூச்சாக தடவும்போது சருமத்தில் செதில்கள் உதிர்வதை தடுத்து பொடுகை குறைக்கிறது.

சிறிது கற்றாழை ஜெல்லை எடுத்து உங்கள் உச்சந்தலை முழுவதும் மசாஜ் செய்யுங்கள். தலையில் கற்றாழை ஜெல் முழுவதுமாக கிரகித்துக் கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் விதமாக வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசி விடுங்கள். வாரத்தில் இரண்டு முறையாவது இந்த ஜெல்லை பயன்படுத்த வேண்டும். சோற்றுக் கற்றாழையில் இருக்கும் ஆன்ட்டி ஃபங்கல் மற்றும் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் பொடுகு உள்ளிட்டஎல்லாவிதமான பூஞ்சை தொற்றுகளையும் எதிர்த்து போராட உதவுகிறது.