தி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா? துர்கா ஸ்டாலினுக்கு தலைமை பதவி கிடைக்கிறதோ?

ஸ்டாலின் குடும்பத்தில் கட்சிப் பதவி இல்லாத வெகுசிலரில் துர்கா ஸ்டாலின் ஒருவர். ஆனால், அவரை இந்துமதத்தின் தூதராக திமு.க.வில் புகுத்தும் வேலையை அவர்களது தொழில்நுட்ப டீம் செய்துவருவதாக சொல்கிறார்கள்.


ஏனென்றால், ஒவ்வொரு தேர்தலின்போதும், தி.மு.க.வை இந்துமத விரோத கட்சி என்று ஒரு பேச்சு கிளம்பும். அதை தடுப்பதற்காகத்தான் இப்போது துர்கா ஸ்டாலினை திட்டமிட்டு களம் இறக்குகிறார்கள். அதை அவரும் செவ்வனே செய்து வருகிறார்.

நான் பாபா கோயிலுக்கு போய்வந்தால் மாமா பிரசாதம் கேட்பார். பெருமாள் கோயில் பிரசாதம் ஸ்டாலினுக்கு ரொம்பப் பிடிக்கும் என்றெல்லாம் பேசுவதைக் கேட்கும் மக்கள், ஓ… தி.மு.க.வினர் இந்துமதத்தை சேர்ந்தவர்கள்தான் என்று எண்ணுவார்களாம். அதற்குத்தான் இத்தனை ஜோடனைகள். 

துர்கா ஸ்டாலினின் இந்து மத பேட்டிகளுக்குப் பின்னே பெரிய சதித் திட்டமே இயங்குவதாக முகநூலில் ஒரு பதிவு உலா வருகிறது. இதோ, அந்தப் பதிவு. பொதுவாக பார்த்தீர்களேயானால் தேர்தல் வரும் நேரங்களில் மட்டுமே அதிகமாக துர்கா ஸ்டாலின் அவர்கள் கோயில் செல்லும் வீடியோக்கள் திட்டமிட்டு பரப்பப்படும்.

அதாவது ஸ்டாலின் மிகத்தீவிர இந்து எதிரி என்ற எண்ணம் ஏறக்குறைய எல்லா இந்து உணர்வாளர்களிடமும் ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் ஸ்டாலின் கோயிலுக்கு செல்வதோ அலல்து இந்துக்களை ஆதரித்து பேசுவதோ இந்துக்களிடையே கேலிக்கூத்தாகவும் பிற மதத்தவர்களிடையே எரிச்சலையும் ஏற்படுத்தும்.

எனவே இந்து எதிர்ப்பு கோஷங்களை ஸ்டாலினும் கட்சியும் கையிலெடுக்கும். புறவாசல் வழியாக துர்கா ஸ்டாலினை பயன்படுத்தி என் கணவர் பழம் சாப்பிடுவார் பஞ்சாமிர்தம் சாப்பிடுவார் என்று கூறி அவர் இந்துக்களுக்கு எதிரானவர் இல்லை என்ற கருத்தை அப்பாவி ஏமாளி இந்துக்களிடையே திணிக்க முயற்சி செய்யும்.

அதை நம்பி இந்த இந்துக்களும் அவர் மனைவி எல்லா கோவிலுக்கும் செல்கிறார் . அவர்கள் குடும்பம் நாத்திகம் இல்லை . நாம் துர்காவிற்காகவாவது வாக்களிக்க வேண்டும் என்று எண்ண வைக்கும். இதுதான் திமுகவின் திடட்ம்.

இதையெல்லாம் நம்பி இந்த ஏமாளி இந்து வாக்களித்து அவன் முதுகில் குத்துபவனை வெற்றிபெற வைத்து நெஞ்சில் குத்து என்று நிமிர்த்து காட்டி அழிந்து போவான்.

இதுவும் சரியாத்தான் இருக்கு.