சுதா ரகுநாதன் இனிமே பிராமணத்தி இல்லையா? சுதாவுக்கு துணை நிற்போம்!

அதனால், இனிமேல் பிராமணர்கள் தங்கள் பிள்ளைக்கு சீக்கிரமே திருமணம் முடித்துவிட வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.


இதில் உச்சகட்டம் என்னவென்றால் பால்ய விவாகம் அதாவது குழந்தைத் திருமணத்தை மீண்டும் செய்ய ஆரம்பிக்கவேண்டும், குறைந்தபட்சம் பார்ப்பனர்களின் வீடுகளிலாவது அதைச் செய்யத் துவங்க வேண்டும் என வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இத்தகைய அதிர்ச்சிகரமான கருத்துகளுக்கு ஆதரவும் அளிக்கிறார்கள். குழந்தைத் திருமணங்களை செய்துவைப்பது மட்டுமல்ல, அதில் பங்கேற்பதும், ஆதரவளிப்பதும் கூட சட்டப்படி குற்றம்.

ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இன்னமும் சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணங்கள் நடக்கிறது. ஆனால் நாம் இங்கே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அளிக்க வேண்டிவ அவசியத்தை விவாதிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறோம். ஆனால், மனவளர்ச்சியில் ஒரு இருநூறு ஆண்டுகள் பின்தங்கி இருக்கும் ஒரு நாகரீகமற்ற கும்பலோடு நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாஜக அரசு இருக்கும் துணிச்சலில் இதுபோன்ற வக்கிரங்களை எல்லாம் வெளிப்படையாக விவாதிக்கத் துணிந்திருக்கிறார்கள்.

காதல் திருமணங்களைத் தவிர்க்க குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்கிற அளவுக்கு எண்ணம் கொண்டிருப்பவர்கள் நம்மோடு விழாக்களில், அலுவலகங்களில், சமூகத்தில், குடும்பங்களில் சக மனிதர்களாக, சாதாரண மனிதர்களைப் போல வலம் வருகிறார்கள் என்பதை நினைக்கும்போதே குமட்டிக்கொண்டு வருகிறது.

அண்ணன், தம்பி, மாமா, நண்பன், அலுவலகத்தில் உடன் பணியாற்றுகிறவர் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த மதவெறி பிடித்த, வக்கிரம் பிடித்த மிருகங்களை உதாசீனப்படுத்தவும், இவர்களை சமூகரீதியாக தனிமைப்படுத்தவும் ஒரு அத்தியாவசியத் தேவை ஏற்பட்டிருக்கிறது. அதைச் செய்தால் மட்டும்தான் இந்த கிருமிகள் அழியும். அடங்கும். குறைந்தபட்சம் இந்த கிருமிகள் அதிகமில்லாத தமிழகத்திலாவது நாம் அதைச் செய்யவேண்டும். காதல் திருமணத்துக்கு குறிப்பாக நாம் சுதா ரகுநாதனுக்கு துணை நிற்க வேண்டிய நேரம் இது.