சுவையான முலாம்பழத்தை ஜூஸ் போட்டு குடிங்க! உங்க உடலில் அத்தனை நன்மைகள் செய்யும்!

கிர்ணி பழங்களில், வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன.


முலாம் பழத்தில் உள்ள அடினோசைன் இரத்த செல்கள் கட்டிப்படுவதைத் தடுக்கின்றது. இதனால், மாரடைப்பும், இதய நோய்களும் வராமல் காக்கின்றது.

முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், இது செரிமானத்தன்மை நிறைந்தது. அதனால், அஜீரனம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து ஜீரனத்திற்கு இடையூறு விளைவிக்கும் அமிலத்தன்மையை அகற்றுகிறது.

பழச்சதையை சீரகம், இஞ்சி சாறு, உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட வயிற்று கோளாறுகள், குடல் நோய்கள் குணமாகும். சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி முகம் டல்லாக இருக்கும், அவர்கள் கிருணிப்பழத்துண்டு ஒன்றை எடுத்து மசித்து முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

முலாம் பழத்தில் சிறுநீர் பிரிப்புத் தன்மை உள்ளதால் சிறுநீரக நோயையும், சிரங்கு போன்ற நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும், எலுமிச்சையுடன் சேர்த்து சாப்பிட்டால், கீல்வாதத்தையும் குணப்படுத்தும்.

முலாம் பழ ஜூஸில் பொட்டாசியம் உள்ளது. இது இதயத் துடிப்பை இயல்பாக்கி, மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி, மூளைச்சோர்வைக் குறைக்கும்.