நாம் பலருக்கும் புதிதான இந்த டிராகன் பழத்தில் எத்தனை நன்மைகள் இருக்கிறது தெரியுமா?

ட்ராகன் பழத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கும்போதிலும் மற்ற புகழ் பெற்ற பழங்களுக்கு மத்தியில் அதிக வரவேற்பை பெறாமல் இருக்கிறது இந்த பழம்.


டிராகன் பழத்தின் விதை செரிமானத்திற்கு நல்லது. நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை கொண்டது. வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.டிராகன் பழம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாகச் செயல்பட வைக்கிறது.

வைட்டமின் பி 3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து, பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்குகிறது. டிராகன் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது, பார்வைத் திறனையும், பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

நார்ச்சத்து மிகவும் அதிகமாக டிராகன் பழத்தில் இருக்கின்றன. ஆகையால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமான பகுதி சிறந்த செயலாற்றலுடன் இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது.