முடி முதல் அடி வரை பல நன்மைகளை தரக்கூடியது கற்றாழை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

கற்றாழையில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி இதில் உள்ளன. கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.


சதைப்பிடிப்புள்ள கற்றாழையின் சதை பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதனுடன் சிறிது படிகாரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சம்மாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கற்றாழை மற்றும் சிறு துளி எலுமிச்சை சாறு கலந்த கலவையினை பயன்படுத்தினால் சரும நோய்கள் நீங்கும். தழும்புகளை நீக்கும் குணங்களும் இதில் உள்ளது. எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை கலந்த கலவையானது முகப்பருக்களை வேருடன் அழிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.

இரசாயனம் அதிகமான சேம்புகளைக் காட்டிலும் கற்றாழை ஜெல்லானது உங்களது தலையில் உள்ள பொடுகுத் தொல்லைகளை எளிதில் நீக்கும். தலையில் ஏற்படும் அமிலத் தன்மையின் காரணமாக உச்சந்தலையில் முடிகொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும்பாலானோருக்கு இது அதிகப்படியாகவே காணப்படும் பிரச்சனையாகும். உச்சந்தலையில் மட்டும் ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகளை கற்றாழை ஜெல்லானது குணப்படுத்தும் மருத்துவத் தன்மைக் கொண்டுள்ளது.

கற்றாழையில் உள்ள புரதச் சத்துக்கள் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் பலவீனமான மற்றும் உதிர்ந்த முடிகள் நீங்கி புதியதாகவும், அடர்த்தியாகவும் முடிகள் வளர்கிறது.

கற்றாழையானது நோய் எதிர்புச் சக்திகளை அதிகரிக்கிறது. மேலும், இரத்த அணுக்களில் புதிய செல்களை ஊக்குவிக்கிறது. மேலும், கற்றாழையிலிருந்து கிடைக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு மற்றும் சைட்டோகின்கள் மூலம் உங்களது நோய் எதிர்புச் சக்திகளை அதிகரிக்க செய்கிறது