சார் அப்டி எல்லாம் தொடாதீங்க..! தலைமை ஆசிரியரிடம் கெஞ்சிய மாணவிகள்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

பள்ளி தலைமை ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாக மாணவிகள் புகாரளித்த சம்பவமானது தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் பெண்ணாகடம் எனுமிடம் அமைந்துள்ளது. பென்னாகரத்தில் உட்பட்ட பூச்சூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியொன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் பெயர் சுப்ரமணி. சுப்பிரமணியின் வயது 53. 

சுப்ரமணி அப்பள்ளியிலுள்ள 10-ஆம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து வந்துள்ளார். அவர்கள் மீது கை வைப்பதும், தேய்ப்பதும் என பல லீலைகளை அரங்கேற்றியுள்ளார். அந்த மாணவிகள் தங்கள் மீதிருந்த கையில் எடுக்க கோரியும், சுப்ரமணி அடங்கவில்லை.

இதனால் மனமுடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து சுப்ரமணியை எச்சரித்தனர். இருப்பினும் சுப்பிரமணி அவற்றை கண்டுகொள்ளவில்லை.

இறுதியாக பெற்றோர் ஒன்று திரண்டு பள்ளிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் அறிந்து காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். 

பெற்றோரிடம் காவல்துறையினர் முதலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தங்கள் மகள்களுக்கு நடக்கும் கொடூரங்கள் பற்றி பெற்றோர் காவல்துறையினரிடம் கூறினர். உடனடியாக அவர்கள் சுப்ரமணியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.