மண்ணுக்குள் உயிரோடு புதைந்த இளைஞர்! 27 நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்த அதிசயம்! எங்கு, எப்படி தெரியுமா?

Haiti நாட்டில் பூகம்பத்தினால் மண்ணில் புதைந்த நபர் கழிவுநீரை குடித்து கொண்டு சுமார் 27 நாட்கள் கழித்து உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் அனைவரிடமும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Haiti நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு நடந்தது அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டது . இந்த பூகம்பத்தில் சுமார் 230,000 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த சம்பவத்தின் போது Evans Monsignac என்ற இளைஞர் அப்படியே கட்டிட இடிபாடுகளுக்கு இடையே மண்ணில் புதைந்தார். இந்த பூகம்பத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் முடிவு செய்தனர். 

ஆனால் 27 நாட்களுக்கு பின்னர் அப்படியொரு அதிசயம் நடந்தது. அது என்னவென்றால் மீட்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் மண்ணுக்குள் புதைந்திருந்த Evans என்ற நபரின் உடலை மீட்கப்பட்டார். பின்னர் அவரை சோதனை செய்ததில் அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

அவரை வெளியில் எடுக்கும் போது வெறும் 40 கிலோ எடையுடன் இருந்த இருந்தார். மேலும், உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது. ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்பு போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த Evans மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பின்னர் பேசிய Evans கடவுளின் கருணையால் தான் நான் உயிர் பிழைத்தேன். உணவு, சாப்பாடு இல்லாமல் இருந்து வேறும் கழிவுநீரை குடித்து உயிர் வாழ்தாக கூறினார். இப்படி, 27 நாட்கள் கழித்து உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் அனைவரிடமும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.