ஒழுக்கங்கெட்ட கூட்டம் திமுக! ஸ்டாலின் ஒரு அழுக்கு! சூடேற்றும் ஹெச்.ராஜா!

நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா திமுகவை தெறிக்கவிட்டார்.


சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஹெச்.ராஜா வாக்குப் பதிவிற்கு பிறகு அமைதியாக இருந்தார். மேலும் கேரளா சென்று அம்மாநில தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தினார்.

தமிழகம் திரும்பிய ஹெச்.ராஜா காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார். இந்த உத்தரவு சட்டப்படி செல்லும் என்றும் அனைத்து கோவில்களிலும் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ராஜா தெரிவித்தார்.

யாகம் நடத்துவதற்கு எதிராக இந்து விரோத தற்குறி வீரமணி அறிக்கை விட்டதற்கு அனைத்து இந்துக்களும் கண்டணத்தை எல்லாவிதத்திலும் தெரிவிக்கவும் ராஜா வலியுறுத்தினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை இழிவாகப் பேசிய போதே வீரமணிக்கு  சரியான பாடம் புகட்டியிருக்க வேண்டும் என்றார் அவர்.

இந்துக்கள் அன்று வீரமணியை ஒன்றும் செய்யாததால் இன்று நம் மத நம்பிக்கையில் தலையிடுகிறார் என்றும் ராஜா சூடேற்றினார். தொடர்ந்து இந்துக்களை வீரமணி இழிவாக பேசினால் கடுமையான பின் விளைவை சந்திக்க வேண்டியது வரும் என்றும் அவர் கூறினார். 

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிப்பது அந்த பதவிக்கு இழுக்கு அவர் ஒரு அழுக்கு என்று ரைமிங்காகவும் ராஜா கூறினார். மேலும் திமுகவே ஒரு ஒழுக்கங்கெட்ட கூட்டம் என்றும் அவர் சாடினார்.