குரு பூர்ணிமா கொண்டாட்டமும்! சத்குருவின் யோக விளக்கமும்!

ஈஷாவில் குருபெளர்ணமி கொண்டாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


ஈஷா யோகா மையத்தில் குரு பெளர்ணமி தினம் மிக விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆதியோகியான சிவன் யோக விஞ்ஞானத்தை சப்தரிஷிகளுக்கு அளித்து ஆதிகுருவாய் உருவெடுத்த திருநாளே குரு பெளர்ணமி. மனிதனின் உள்நிலை மாற்றத்திற்கு இந்த குரு பௌர்ணமி நாள் சிறந்த வாய்ப்பாக அமைகிறது. 

யோக பாரம்பரியத்தில் சிவனை கடவுளாக வணங்குவதில்லை. சிவனை ஆதியோகியாகவும் ஆதிகுருவாகவும் பார்க்கிறோம். ஆதியோகியிடமிருந்து தான் யோகா முதன்முதலில் தோன்றியது. சப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் ஆதியோகியான சிவனிடமிருந்து பெற்ற யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர்.

அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுடன் யோக அறிவினை பகிர்ந்து கொண்டார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து யோக அறிவினை பகிர்ந்து கொண்டதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது.  இதன்காரணமாக, ஈஷா யோகா மையம் சார்பில் குரு பெளர்ணமி தினம் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு குரு பெளர்ணமி தின விழா 112 அடி ஆதியோகி முன்பு இன்று (ஜுலை 16) நடைபெற்றது.