நடுரோட்டில் சதக் சதக்..! ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய இளைஞன்! பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்!

சூரத்: நடு ரோட்டில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலம், சூரத் பகுதியை சேர்ந்தவர் ஜைனிஷ் படேல். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் பேருந்து நிலையத்தில் நின்றபோது, அவருக்கு பின்புறமாக வந்த மர்ம நபர் திடீரென கத்தியால் அவரை குத்தியுள்ளார். தப்பியோட முயன்ற ஜைனிஷை துரத்திச் சென்ற அந்த நபர் விடாமல் கழுத்து, முதுகு, மார்பு உள்ளிட்ட இடங்களில் சராமரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.

இதில், படுகாயம் அடைந்த ஜைனிஷ் நடுரோட்டில் உதவி கேட்டு அல்லாடினார். பிறகு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், ஜிகி என்ற நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில கைது செய்தனர்.