மதுரை: பேருந்து மீது நேருக்கு நேர் மோதி சிதைந்த கார்..! நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் துடிதுடித்து பலியான பரிதாபம்!

மதுரை திருமங்கலம் அருகே இன்று அதிகாலை அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்கள்.


மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் என்ற வலிபன் தனது 26வது பிறந்தநாளை கொண்டாட மதுரை பழங்காநத்தத்தில் உள்ள நண்பர்கள் பிரசன்னகுமார் மற்றுன் குணா ஆகியோரது போட்டோ ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளனர். 

பின்னர் தனது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடி விட்டு தினேஷ் மற்றும் அவனது நண்பர்களுடன் இன்று அதிகாலை 3 மணியளவில் தினேசை வீட்டில் விடுவதற்காக பிரசன்னகுமார், குணா ஆகியோர் காரில் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், மதுரை-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வேடர்புளியங்குளம் அருகே கார் சென்று கொண்டு இருந்த வேளையில், திருநெல்வேலியில் இருந்து மதுரை வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. விபத்தில் கார் நொறுங்கியது. அதில் பயணம் செய்த 3 பேரும் காருக்குள்ளேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காரில் இருந்த தினேஷ், குணா, பிரசன்னகுமார் ஆகியோர் உடல் நசுங்கி காருக்குள்ளேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.