MARRY KASHMIR GIRLS! கூகுளில் டிரெண்டான இந்திய இளைஞர்களின் ஜொல்! இதுக்காயா காஷ்மீர ரெண்டா பிரச்சார் மோடி?

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதோடு அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலம் தொடர்பான நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் கூகுள் தேடலில் வெளிப்பட்டு வருகின்றன.


காஷ்மீர் விவகாரம் குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அங்கு பயங்கரவாத ஒழிவதோடு அங்கு மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத் திட்டங்களும் எய்ம்ஸ், ஐஐஎம் உள்ளிட்ட நிறுவனங்களும் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். காஷ்மீர் மக்களுக்கு அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் காஷ்மீர் தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கூகுளில் தேடல்களை முன்வைக்கிறார்கள் அந்த வகையில் வ்மேற்கு வங்கம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஆண்கள் காஷ்மீரில் திருமணத்திற்கு பெண் கிடைக்குமா என தேடுகின்றனர். அந்த வகையில் ‘Marry Kashmir girl' என்ற வாக்கியம் கூகுளில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.

டெல்லி, ஜார்கண்ட், குஜராத், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மக்கள் காஷ்மீரில் நிலம் வாங்குவது பற்றி அதிகமாக தேடுகிறார்கள், அதன்படி buy land in kashmir என்ற வாக்கியம் கூகுளில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகம் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த மக்கள் காஷ்மீருக்கு செல்ல விரும்புகிறார்கள், அதன்படி move to kashmir என்ற வாக்கியம் கூகுளில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.