பைக் ஓட்டனும்! கத்து தர்றியா? ஆசையாக சென்ற இளம் பெண்! நொடியில் சடலமான விபரீதம்!

நண்பரிடம் பைக் ஓட்ட கத்து தருமாறு கூறி வண்டியை வாங்கி ஓட்டிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீத குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


குன்றத்தூரில் உள்ள சிக்கராயபுரம் பகுதியில் விபத்து ஏற்பட்டதை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த இளம்பெண் மற்றும் வாலிபர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். வாலிபர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், விபத்தில் உயிரிழந்த இளம்பெண் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிநயா என்றும் வாலிபர் அண்ணாமலை என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே தனியார் ஷோரூமில் பணிபுரிந்து வந்த போது பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அபிநயா சில தினங்களுக்கு முன்பு அந்த ஷோரூமிலிருந்து நின்று விட்டதாகவும் சம்பள பாக்கி இருப்பதாக கூறி வீட்டை விட்டு வெளியே வந்ததும் விசாரணையில் கூறப்படுகிறது. 

வீட்டை விட்டு வெளியே வந்த நேரத்தில் அண்ணாமலை அபிநயாவை அழைத்துச் செல்ல காத்திருந்ததாகவும், அப்போது அபிநயா பைக் ஓட்ட மிகவும் ஆசையாக இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு சம்மதித்த அண்ணாமலை அபிநாயாவிடம் தனது பைக்கை கொடுத்துவிட்டு பின்னால் அமர்ந்துள்ளார். 

அப்போது அபிநயா நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த சுவற்றில் வேகமாக மோதியதில் கடுமையாக காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் இறந்துள்ளதாகவும், அண்ணாமலை பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய தாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.