காதலியை கொலை செய்துவிட்டு காதலன் அரங்கேற்றிய நாடகம்! ஆனால் காட்டிக் கொடுத்த தேதி! சினிமாவை விஞ்சும் சம்பவம்!

பிரித்தானியாவில் தனது காதலியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பிரித்தானியாவைச் சேர்ந்த நாடின், 28 என்ற பெண்ணிற்கும் அமெரிக்காவைச் சேர்ந்த சாமி எந்த நபருக்கும் இணையத்தின் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்நிலையில் சில நாட்கள் நண்பர்களாக பழகிய அவர்கள் பின்னர் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். இருவரும் நன்றாக காதலித்து வந்த நிலையில் திடீரென நாடின் என்பவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது காதலன் சாமி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றினர் பின்னர் நாடின் என்பவரின் சடலம் அருகே ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதையும் கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த கொலையின் முக்கிய தடயமாக அந்த கடிதம் அமைந்துள்ளது.

அது என்னவென்றால் இந்த கொலை சம்பவம் நடந்தது 29 12 2014, ஆனால் அந்தக் கடிதத்தில் 12 29 2014 என தேதி எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் போலீசார் விசாரணையில் நாடின் என்பவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் அதனால் இந்த மாதிரியாக தேதி நாட்டினர் எழுத மாட்டார்கள் எனவும் அமெரிக்காவில் மட்டுமே முதலில் மாதம் அதன் பிறகு தேதி மற்றும் வருடத்தை குறிப்பிடுவார்கள் என்பதை உறுதி செய்தனர்.

பின்னர் நாடின் என்பவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவரது காதலன் சாமி என்பவர் தான் கொலை செய்துள்ளார் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக தேட ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து தீவிரமாக தேடி வந்தநிலையில் கொலை நடந்த மூன்று வாரங்களுக்கு பிறகு சாம்பியா நாட்டு எல்லைக்குள் சாமி பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது: முதலில் சமூக வலைதளங்களின் மூலமாக இருவரும் அறிமுகமான பின்னர் தான் ஒரு கோடீஸ்வரர் என நாடின் என்பவருடன் பழகி வந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஒருநாள் எதிர்பாராதவிதமாக நாடின் அமெரிக்காவிற்கு வந்து சாமியை சந்தித்துள்ளார். அப்போது அவர் பணக்காரர் கிடையாது எனவும் டாக்சி ஓட்டி வருகிறார் என்பதை அறிந்து கொண்ட நாடின் இருவருக்கும் இடையே உண்டான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சாமி நாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். மற்றும் நிர்வாண புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் நாடின் பல நாட்களாக சாமியுடன் பேசாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவரை பார்க்க சாமி அவரது வீட்டிற்கு வந்துள்ளார் பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சாமி, ஹோட்டல் அறையில் வைத்து நாடினை கொலை செய்துவிட்டு அவர் கைப்பட எழுதுவது போல கடிதம் ஒன்றை எழுதி அதை வைத்து விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக சாமி ஒப்புக் கொண்டுள்ளார். கொலைக்கு காரணமாக இருந்த சாமி என்பவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.