என் வயித்துல குழந்தையை கொடுத்துட்டு வேறொரு பெண்ணோட..! மதபோதகர் குறித்து இளம் பெண் வெளியிட்ட பகீர்..! தஞ்சை பரபரப்பு!

தஞ்சையில் காதலில் எல்லை மீறியதால் கர்ப்பமான காதலியை திருமணம் செய்துக்கொள்வதாக ஏமாற்றி கர்பத்தை கலைத்து விட்டு, நேரம் பார்த்து எஸ்கேப் ஆன காதலனுக்கு போலீஸ் வலை வீச்சு.


தஞ்சாவூர், வங்கி ஊழியர்கள் காலணியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகள் அபிராமி(21 வயது ), மாதாக்கோட்டையை சேர்ந்த ஸ்டான்லி பென்னி ராபர்ட் (வயது 27) . இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில் பல்வேறு நேரங்களில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் காதலி அபிராமி கர்ப்பமானதால் அதிர்ச்சி அடைந்த ராபர்ட்.. கர்பத்தை கலைத்து விட்டால் திருமணம் செய்து கொள்வதாக கூறியதில் அபிராமியும் கர்பத்தை கலைத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் காதலன் ராபர்ட், யாருக்கும் தெரியாமல் வெளி ஊரில் ரகசியமாக நாளை மற்றொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்ள போவதாக வெளியான தகவலை அடுத்து,  அபிராமி காதலன் ராபர்ட்டை மீட்டு தனக்கு திருமணம் செய்து வைக்கும் படியாக தஞ்சை மாவட்ட எஸ் பி இடம் புகார் மனு அளித்துள்ளார்.