வெட்கப்பட வேண்டியது சூரப்பா அல்ல.... தமிழர்கள் – கெளதமன் ஆவேசம்

தமிழர்களுக்கு எதிராக செயல்படும் அண்ணா பல்கலை சூரப்பா இன்னமும் பதவியில் இருப்பது தமிழர்களுக்குத்தான் அவமானம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமான வ.கெளதமன்.


அண்ணா பல்கலை கழக துணைவேந்தராக சூரப்பா நியமிககபட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, சூரப்பாவின் தாய்மொழி கன்னடம், இரண்டு ஆண்டுகள் தமிழகத்தின் தலைநகரில் இருக்கும் ஒரு முன்னணி பல்கலை கழகத்தின் துணைவேந்தராக இருந்தும் அவர் குறைந்தபட்ச பேச்சு வழக்கிற்காக கூட தமிழ்மொழியை அறிந்திருக்க/ கற்றுக்கொள்ளவோ விருப்ப படவில்லை

இரண்டு மாதங்களுக்கு முன் YouTube சேனல் ஒன்றின் பேட்டியில் கூறுகிறார் எனக்கு கன்னடமும், ஆங்கிலமும் தான் தெரியும் தமிழ் தெரியாது என்று, அப்படிபட்டவரை இங்கே இத்தனை நாளாய் துணைவேந்தராக இருக்க அனுமதித்ததே அதிகம்

எடப்பாடியின் முதல்வர் நாற்காலி பசைக்காக தன்மானத்தை இழந்து தமிழர் நலனை சூரப்பாவிடம் அடகு வைத்ததின் விளைவு, இப்போது சூரப்பா மாநில அரசின் நிதியின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலை கழகத்தை நேரடியாக மத்திய அரசே ஏற்று நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், 

கர்நாடகத்தின் மாநில நிதியில் இயங்கும் ஒரு பல்கலை கழகத்தில் தமிழர் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கபட்டு, அவர் தனக்கு கன்னட மொழியே தெரியாது என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, அதோடு நில்லாமல் அவர் துணைவேந்தராக இருக்கும் பல்கலை கழகத்தை மாநில அரசின் அனுமதியில்லாமல் மத்திய அரசே நேரடியாக பல்கலை கழகத்தை நிர்வகிக்கலாம் என்று கடிதம் ஒன்றை எழுதிவிட முடியுமா என்பதை மட்டும் தமிழக மக்கள் மனதில் கொள்ளுங்கள்.

வெட்கப்படவேண்டியது சூரப்பா.. அல்ல தமிழர்கள்.