அன்று நாட்டுக்காக ஒரு காலை இழந்த தமிழன்! இன்று ஒட்டு மொத்த இந்தியாவையும் பெருமை கொள்ள வைத்த உணர்ச்சிமிகு தருணம்!

பிரான்சில் நடைபெற்ற உலக பாரா தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழர் ஒருவர் தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஆனந்த் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதில் இளம் வயது முதலே ஆர்வம் கொண்டவர். இதனால் பள்ளிப் பருவத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். தடகள போட்டியில் சாதனைகளை பல படைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஆனந்திற்கு இருந்தது. இதற்கிடையே ராணுவத்தில் வேலை கிடைத்ததால் காஷ்மீருக்கு சென்று பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 10 வருடத்திற்கு முன்னர் காஷ்மீர் எல்லையில் நடந்த சண்டையில் ஆனந்தின் இடது கால் முற்றிலும் சேதம் அடைந்தது. பின்னர் அவர் வேறு பணியில் ராணுவத்தில் அமர்த்தப்பட்டார். பின்னர் விருப்ப ஓய்வு பெற்ற ஆனந்த் சொந்த ஊருக்கு திரும்பினார்.

பின்னர் ராணுவ அதிகாரிகள் உதவியுடன் 25 லட்சம் ரூபாய் செலவில் செயற்கை கால் பொருத்திக்கொண்டார். பின்னர் தடகளபோட்டியில் சாதிக்க தீவிர பயிற்சி மேற்கொண்ட ஆனந்த் ஆசிய அளவிலான பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்கள் பெற்றுள்ளார்.

தற்போது பிரான்சில் நடைபெற்ற உலக பாரா தடகளப் போட்டியின் 200 மீட்டர் தகுதிச் சுற்றில் கலந்து கொண்ட ஆனந்த் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். ஆனந்த்தை பிரதமர் நரேந்திர மோடியும் நேரில் அழைத்து பாராட்டினார். விடா முயற்சியில் தங்கப் பதக்கம் பெற்ற ஆனந்துக்கு சமூக வலைதளங்களில்பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஆனந்திற்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.