பேர் இரைச்சல்! அசுர வேகம்! கட்டுக்கடங்கா ஆர்ப்பரிப்பு! ஊருக்குள் நுழைந்த வெள்ளம்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

திருவனந்தபுரம்: கேரளாவில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம் தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகின்றன.


கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் பல இடங்களிலும் இடைவிடாமல் பெய்யும் மழை காரணமாக, வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புகளை மூழ்கடித்து வருகிறது.

சென்ற ஆண்டில் இருந்ததைவிட தற்போது மழை, வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளதென்று, பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

இடுக்கி, வயநாடு, போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், வயநாடு பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே, சாலையில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம் தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்கள் நடமாடும் சாலையில் திடீரென பேய் வேகத்தில் பேரிரைச்சலுடன் வெள்ள நீர் ஆக்ரோஷமாக, வாகனங்கள் செல்வது போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதை பார்ப்பதற்கே பெரும் அச்சமாக உள்ளது. இந்த வீடியோவை பலரும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக உள்ளது.