நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரும் தூக்கில் ஏற்றப்பட்ட நிகழ்வை மொத்தமாகவே ஐந்தே ஐந்து பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.
நிர்பயா குற்றவாளிகள் 4 பேர் தூக்கில் தொங்கியதை நேரில் பார்த்த ஐந்தே ஐந்து பேர்..! யார் தெரியுமா?
தூக்கு தண்டனைறை நிறைவேற்றுவதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளையும் நேற்று மாலையே திகார் சிறை நிர்வாகம் செய்து முடித்துவிட்டது. இதனை அடுத்து தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிகள் துரித கதியில் நடைபெற்றன. நேற்று காலை முதலே மூன்று முறை தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பவன் ஜலாட் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சரியாக 5.30 மணிக்கு நான்கு பேரும் தூக்கில் ஏற்றப்பட்டனர். அப்போது தூக்கு தண்டனைக்கு அனுமதி கொடுத்த மாவட்ட நீதிபதி, திகார் சிறையின் சூப்பிரண்ட், திகார் சிறையின் துணை சூப்பிரண்டு மற்றும் திகார் சிறையின் மருத்துவ அதிகாரிகள் மட்டுமே உடன் இருந்தனர்.
இவர்கள் தவிர தூக்கு தண்டனையை நிறைவேற்றிய பவான் ஜலாட்டும் அங்கு இருந்தார். இதன் மூலம் குற்றவாளிகள் நான்கு பேரையும் தூக்கு தண்டனையில் நிறைவேற்றிய சமயத்தில் ஐந்து பேர் மட்டுமே பார்த்துள்ளனர். முன்னதாக நேற்று மாலையே திகார் சிறைக் கைதிகள் அனைவரும் தங்களுக்கு உரிய அறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இன்று திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதை அறிந்து பெரும்பாலான கைதிகள் உள்ளே உறங்கவில்லை என்றும் அவர்கள் என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருந்துள்ளனர்.மேலும் நான்கு பேரும் தூக்கில் ஏற்றப்படுவதை நேரில் காண நிர்பயா பெற்றோர் விரும்பியதாகவும் ஆனால் அதற்கு விதிகளில் அனுமதி இல்லை என்பதால் மறுக்கப்பட்டது.