பேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூலை நெருங்கிய சூப்பர் டீலக்ஸ்! முதல் நாளிலேயே விஜய்சேதுபதி சாதனை!

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் முதல் நாளிலேயே ரஜினியின் பேட்ட, அஜீத்ஹின் விஸ்வாசம் படங்களுக்கு இணையான வசூலை எட்டியுள்ளது.


விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா அக்கினேனி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ள முதல் நாளிலேயே வசூல் சாதனை படைக்க படம் குறித்த நல்ல விமர்சனங்களும் வாய் வழி விளம்பரமுமே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. 

சூப்பர் டீலக்ஸ் படம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் சிறப்பான கருத்துக்கள் பரவியுள்ளன. படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படமான ஆரண்யகாண்டம் விருதுக்குரிய படமாக இருந்தாலும் வசூலில் களைகட்டத் தவறி விட்டது. அந்தக் குறையை சூப்பர் டீலக்ஸ் பட தீர்த்து வைத்துள்ளது. 

சென்னையில் மட்டும் சூப்பர் டீலக்ஸ் படம் முதல் நாளில் 41 லட்சம் ரூபாயை வசூலித்துள்ள நிலையில் நயன் தாரா நடித்த அய்ரா படத்துக்கு 31 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சூப்பர் டீலக்ஸ் பட வசூல்  அமெரிக்காவில் முதல் நாளில் ரஜினியின் பேட்ட, அஜீத்ஹின் விஸ்வாசம் படங்களுக்கு இணையாக 1 லட்சம் டாலரைக் கடந்துள்ளதாகவும் சினிமா நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.