ட்யூசன் சென்டரில் பயங்கர தீ! உடல் கருகி உயிரிழந்த 17 மாணவர்கள்!

சூரத்தில், வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...


சூரத்தின் சர்தானா பகுதியின் வணிக வளாக கட்டிடத்தில்  ட்யூசன் சென்டர் ஒன்று நடைபெற்று வந்துள்ளது. திடீரென இன்று மாலை அங்கு தீ பிடித்துள்ளது. தீ பிடித்த வேகத்தில் புகை சூழ்ந்த காரணத்தினால் ட்யூசன் சென்டரில் இருந்து மாணவர்களால் வெளியேற முடியவில்லை.

இதனால் பலர் வணிக வளாகத்தில் இருந்து உயிரை காத்துக் கொள்ள மாடியில் இருந்து குதித்துள்ளனர். ஆனாலும் தீ சூழந்த காரணத்தினால் தற்போது வரை 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருமே 14 முதல் 17 வயதுள்ள டீன் ஏஜ் சிறார்கள்.

திடீர் தீ விபத்தில்  17 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது,இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் பலியானோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூ நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.